சுடச்சுட

  

  மதுராந்தகத்தை அடுத்த வில்வராயநல்லூர் சுபம் கல்வி நிறுவனத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம், சவிதா சமையல் எரிவாயு முகமை ஆகியவற்றின் சார்பாக, எரிவாயு விழிப்புணர்வு வாரம் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை (30.10.17 முதல் 4.11.201வரை) கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க விழா சுபம் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. சுபம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.மணோகர்குமார் தலைமை வகித்தார். நிர்வாகி எம்.அபய்குமார் முன்னிலை வகித்தார். 
  இயக்குநர் என்.பத்ரி, கல்லூரி முதல்வர்கள் டே.ஜாஸ்மின் சுஜாதா (கல்வியியல் கல்லூரி), லீசா பிளாரன்ஸ் (வித்யாலயா மெட்ரிக். பள்ளி) சவேதா எரிவாயு முகமை நிறுவனர் சுசில் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
  இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள் ஜோதிஷ், ஹானிஷா ஆகியோர் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு முறைகள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளக்கினர். 
  பின்னர் கல்லூரி மாணவர்களுக்கு ஊழலற்ற இந்தியா என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி தாளாளர் எஸ்.டி.மணோகர் குமார் பரிசு வழங்கினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai