Enable Javscript for better performance
குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்: பொதுமக்கள் அவதி

    By DIN  |   Published on : 02nd November 2017 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vepampattu

    திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினர். 
    தமிழகத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. 
    இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, தாமரைபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. 
    இதனால் திருவள்ளூர் அம்சா நகர், பஜார் வீதி, காக்களூர், வேப்பம்பட்டு, அய்யன் திருவள்ளுவர் நகர், அரண்வாயல், எம்.ஜி.ஆர். நகர், தலக்காஞ்சேரி ஆகிய இடங்களில் தாழ்வான குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
    சாலைகள் குண்டும், குழியுமானதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாயினர். 
    மேலும், அலுவலகம் செல்வோர் பொதுமக்கள் மற்றும் சிறுதொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், இம்மழையால் குளம் குட்டைகளிலும், விவசாயக் கிணறுகளிலும் நீர் ஆதாரத்துக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    பொன்னேரியில் அதிகபட்ச மழை
    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. பொன்னேரியில் அதிகபட்ச மழையளவு பதிவாகியுள்ளது.
    புதன்கிழமை நிலவரப்படி, பதிவாகியுள்ள மழையளவு விவரம் ( மில்லி மீட்டரில்): பொன்னேரி -96, அம்பத்தூர்-86, கும்மிடிப்பூண்டி-75, தாமரைப்பாக்கம்-63, சோழவரம்-55, ஊத்துக்கோட்டை-38, செங்குன்றம்-37, திருவள்ளூர் -34, செம்பரம்பாக்கம் - 34, பூந்தமல்லி-26, திருத்தணி-24, திருவாலங்காடு-14, ஆர்.கே.பேட்டை-12, பள்ளிப்பட்டு-7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai