Enable Javscript for better performance
டெங்கு கொசுக்களைத் தடுக்க வீடு வீடாகச் சென்று அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    டெங்கு கொசுக்களைத் தடுக்க வீடு வீடாகச் சென்று அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 02nd November 2017 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    search

    வேலஞ்சேரி கிராமத்தில் வீடு வீடாக ஆய்வு செய்த மாவட்ட வருவாய் அலுவலர் முத்து.

    டெங்கு கொசுக்கள் வளராமல் தடுப்பதற்கு வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
    திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி கிராமம் மற்றும் காலனியில் புதன்கிழமை டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, வட்டார மருத்துவ அலுவலர் சரண்குமார், திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன், ஒன்றிய ஆணையர் ராஜராஜன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வீடு, வீடாக நேரில் சென்று டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 
    மேலும், டெங்கு கொசுவாக உருவாகும் லவா கொசுப் புழுவை ஒரு பாட்டிலில் அடைத்து, பொதுமக்களுக்கு காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் முத்து கூறுகையில், டெங்கு கொசுவை விரட்டவும், கொசு வளராமல் தடுக்கவும் முதல்கட்டமாக தங்களது வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களை தூய்மை வைத்திருக்க வேண்டும். 
    சுகாதாரத் துறை ஊழியர்கள் கிராமங்களுக்குச் சென்று, துôய்மைப் பணிகள் மேற்கொண்டும், கொசுப் புகை அடித்தும், காய்ச்சல் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் தாமதம் செய்யாமல் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
    ஆய்வின் போது, திருத்தணி வருவாய் ஆய்வாளர் வாணி, சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், துப்புரவு ஊழியர்கள், தூய்மைக் காவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai