Enable Javscript for better performance
பிறப்பு, இறப்பை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    பிறப்பு, இறப்பை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த பயிற்சி

    By DIN  |   Published on : 02nd November 2017 03:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    training

    பதிவாளர்களுக்கு பயிற்சி அளித்த மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர் துணை இயக்குநர் ரவி.

    பிறப்பு மற்றும் இறப்பு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து பதிவாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி திருத்தணியில் புதன்கிழமை நடைபெற்றது.
    திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில், பிறப்பு மற்றும் இறப்புகளை இணைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான ஆய்வுக் கூட்டம் மற்றும் ஒரு நாள் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜெயராமன் தலைமை வகித்தார். 
    வட்டாட்சியர் நரசிம்மன் வரவேற்றார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, மாவட்ட பிறப்பு, இறப்பு பதிவாளர் துணை இயக்குநர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு, பிறப்பு, இறப்புகளை எவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பயனாளிகளிடம் இருந்து பெற வேண்டிய தகவல்கள் மற்றும் இணையத்தில் பதிவு செய்யும் முறை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.
    பயிற்சியில் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் துணை வட்டாட்சியர்கள், அலுவலக உதவியாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பள்ளிப்பட்டு வட்டாட்சியர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai