சுடச்சுட

  

  பூந்தமல்லி கிளைச் சிறையை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 02nd November 2017 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பூந்தமல்லி கிளைச் சிறை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கில் அப்துல் ஹக்கீம், அப்துல் சமீம், சையத்அலி நவாஸ், சாதிக் பாட்சா, சமியுல்லா, முகமது முத்தஹீர் உள்ளிட்ட 16 பேரை போலீஸார் கைது செய்தனர். பூந்தமல்லி கிளைச் சிறையில் உள்ள தனது கணவர் முகமது முத்தஹீரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது மனைவி நசியாகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
  அந்த மனுவில், 'பூந்தமல்லி சிறையில் கைதிகள் சிறிய அறையில், போதிய வெளிச்சமின்றி விலங்குகளைப் போல் அடைக்கப்பட்டுள்ளனர். 
  புழல் சிறையில் கைதிகளுக்கு பல்வேறு வசதிகள் உள்ள நிலையில் பூந்தமல்லி சிறையின் நிலை மோசமாக உள்ளது. இதுதொடர்பாக சிறைத்துறை மற்றும் காவல்துறை டிஜிபியிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது கணவரை வேறு சிறைக்கு மாற்ற சிறை துறைக்கு உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் கோரியிருந்தார்.
  இந்த மனு நீதிபதிகள் ராஜிவ்ஷக்தேர் மற்றும் என்.சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 
  அப்போது, நீதிபதிகள் பூந்தமல்லி கிளைச் சிறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆய்வு செய்து, புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai