Enable Javscript for better performance
பைக் மீது லாரி மோதல்: ஜவுளிக் கடை அதிபர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    செங்குன்றம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஜவுளிக் கடை அதிபர் உயிரிழந்தார்.
    சென்னை தண்டையார்பேட்டை துர்காதேவி நகர் 6-ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்த கல்பத்ராஜின் மகன் சுனில்குமார் (21). இவர் தண்டையார்பேட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், சுனில்குமார் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் செங்குன்றம் பகுதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் தண்டையார்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார். செங்குன்றம் பாலவாயல் சிக்னல் ஜி.என்.டி. சாலையில் சென்றபோது, ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுனில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் சித்ரா வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநர் முருகனை (43) கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai