Enable Javscript for better performance
பொன்னேரியில் போலி மருத்துவர்கள் இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பொன்னேரி அருகே பட்டப்படிப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்துவந்த போலி மருத்துவர்கள் 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டப்படிப்பு மட்டும் படித்து விட்டு, பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக, திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இணை இயக்குநர் தயாளன் தலைமையில், சுகாதாரத் துறையினர் பொன்னேரி அருகே இலவம்பேடு பகுதிக்கு வந்தனர். அங்கு கிளினிக் வைத்து, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த ஜெகதீசனிடம் (47) விசாரணை நடத்தினர். அதில் அவர் பட்டப்படிப்பு மட்டும் படித்து விட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.
    இதே பகுதியில் மற்றொரு இடத்தில் கிளினிக் நடத்தி வந்த சாமுவேலிடம் (46) நடத்திய விசாரணையில், அவர் 10-ஆம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு, ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
    இதையடுத்து, அவர்கள் இருவரையும் பொன்னேரி காவல் நிலையத்தில் சுகாதாரத் துறையினர் ஒப்படைத்தனர். பொன்னேரி போலீஸார், இருவர் மீதும் வழக்கு பதிந்து, அவர்களைக் கைது செய்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai