சுடச்சுட

    
    rani

    பெரியபாளையம் அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி புதன்கிழமை உயிரிழந்தார்.
    பெரியபாளையம் அருகே அத்தங்கி காவனூர் ஊராட்சிக்கு உள்பட்ட கோபாலபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகள் ராணி. இவர், அங்குள்ள குருவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 
    இந்நிலையில், ராணிக்கு கடந்த 3 நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராணி புதன்கிழமை உயிரிழந்தார்.
    மாணவி ராணி மூளைக் காய்ச்சல் காரணமாக மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    இதனால் அத்தங்கிகாவனூர் பகுதியில் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai