சுடச்சுட

  

  தஞ்சாவூர் பெரிய கோயிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி மீட்கப்பட்டுள்ளதால், அவரது உறவினர்கள் அல்லது பெற்றோர்கள் கேரளத்தில் உள்ள மலப்புரம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். 
  இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இக்குழந்தை தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து 6 மாத பெண் குழந்தையாக இருந்தபோது, வயதான பெண் ஒருவரால் கேரள மாநிலத்துக்கு சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பாக 5 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டுள்ளார். தற்போது, இக்குழந்தையான யாழினி பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், வாண்டூர் போலீஸாரால் கடந்த 5.4.2016-இல் மீட்கப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து மலப்புரம் குழந்தைகள் நல குழுமத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அச்சிறுமி மலப்புரத்திலுள்ள குழந்தைகள் இல்லத்தில் தாற்காலிகமாக பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார். 
  அதனால், இக்குழந்தையின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரேனும் குழந்தையை தவறவிட்டிருந்தால், இந்த அறிவிப்பு வெளியான 30 நாள்களுக்குள், அதற்கான ஆவணங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.48 , ஜே.என்.சாலை (சாந்தி கல்யாண மண்டபம் அருகில்), திருவள்ளூர், தொலைபேசி எண்- 044 - 27665595 அல்லது 9962552223 என்ற முகவரியில் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai