சுடச்சுட

  
  meet1

  கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள், தொழிற்சங்க அமைப்பினருக்கு வருங்கால வைப்பு நிதி குறித்த குறை தீர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இக்கூட்டத்தில் தொழிற்சாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கை உருவாக்குவது குறித்தும், அந்த கணக்கை தொழிற்சாலை நிர்வாகம் எப்படி செயல்படுத்துகிறது என்றும், தொழிலாளர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதி விவரங்களை தேவைப்படும் போது தெரிந்து கொள்ளும் முறை குறித்தும், வைப்பு நிதியில் இருந்து கடன் பெறுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு சங்கத் தலைவர் ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சங்கச் செயலாளர் ஜெ.ராஜரத்தினம் வரவேற்றார். 
  சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல சேம நல அலுவலக உதவி ஆணையர் ராகேஷ் குமார் சின்ஹா, செயல் அதிகாரி பிரபு சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். அனைத்து தொழிலாளர்கள் முற்போக்கு சங்கத்தின் கும்மிடிப்பூண்டி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன் பேசுகையில், ""தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியை சில தொழிற்சாலைகளை முறையாக பின்பற்றுவதில்லை எனவும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் யாருக்கும் வைப்பு நிதி கணக்கு பின்பற்றப்படுவதில்லை"" என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதைத் தொடர்ந்து, தொழிற்சாலைப் பிரதிநிதிகள் சார்பில் வருங்கால வைப்பு நிதி கணக்கு நிர்வகித்தல் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. 
  கூட்ட முடிவில் கும்மிடிப்பூண்டி சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கப் பொருளாளர் கே.ராஜகோபாலன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai