Enable Javscript for better performance
தொடர் மழையால் 37 ஏரிகள், குளங்கள் நிரம்பின : விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    தொடர் மழையால் 37 ஏரிகள், குளங்கள் நிரம்பின : விவசாயிகள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 03rd November 2017 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rain2

    திருவள்ளூர் பகுதியில் தொடர் மழையால் இதுவரை 37 ஏரிகள், குளங்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    திருவள்ளூர் மாவட்டத்தில் 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் 787 ஏரிகளும் , 14 ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 649 ஏரிகளும் உள்ளன. இதுதவிர 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குளங்கள், குட்டைகள் உள்ளன. 
    இப்பகுதிகளில் கடந்த சில நாள்களா தொடர் மழை பெய்து வருகிறது. இதுவரையில் 37 ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. 40-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளில் பாதி அளவு நிரம்பியுள்ளன.
    மாவட்டத்தில் திருத்தணி பகுதியில் கரும்பு, மலர் சாகுபடியும், பொன்னேரி , ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளில் நெல் , வாழை, நிலக்கடலை, காய்கறிகள் மற்றும் மக்காச்சோளமும், திருவள்ளூர் பகுதிகளில் வாழை , மரவள்ளிக் கிழங்கு, நெல் ஆகியனவும் பயிரிட்டுள்ளன.
    தற்போது, பெய்து வரும் மழையால் பயிர்கள் அனைத்தும் செழிப்பாக வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): பூந்தமல்லி-42, அம்பத்தூர்-29, சோழவரம்-25, தாமரைப்பாக்கம்-19, செங்குன்றம்-15, திருவேலங்காடு-13, ஊத்துக்கோட்டை-12, திருவள்ளூர்-11, பூண்டி-5.80, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி-5 , திருத்தணி-3, ஆர்.கே.பேட்டை-2.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai