சுடச்சுட

  
  collector

  திருவள்ளூர் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்ற டெங்கு மற்றும் தொற்று நோய் தடுப்புப் பணிகளை ஆட்சியர் எ.சுந்தரவல்லி வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
  திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட 23-ஆவது வார்டு பகுதியில் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் தடுப்பு குறித்த சிறப்பு முகாமை பார்வையிட்ட அவர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 
  பின்னர், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கி, அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார்.
  பின்னர், நீர்தேக்கத் தொட்டியில் தேக்கியுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என ஆய்வு செய்தார். மேலும், தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள் ஆகியவற்றி அகற்ற துப்புரவுப் பணியாளர்களை அறிவுறுத்தினார். 
  ஆய்வின் போது திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சீ.செந்தில் குமரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு. ஜே.பிரபாகரன், திருவள்ளுர் வருவாய் கோட்டாட்சியர் கெ.ரா.திவ்யஸ்ரீ, வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், சுகாதாரப் பணியாளர்கள் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai