Enable Javscript for better performance
மழைநீர் அகற்றும் பணியில் காவல் அதிகாரி- Dinamani

சுடச்சுட

    

    மதுரவாயல் பகுதி அருகே மழைநீர் அகற்றுவதற்கான பணியை காவல் துறை அதிகாரி நேரில் பார்வையிட்டு நடவடக்கை மேற்கொண்டார்.
    சென்னை புறநகர் பகுதியான மதுரவாயல் உள்வட்டச் சாலையின் கீழே செல்லும் கூவம்ஆற்றில் கழிவுகளும், ஆகாயத் தாமரையும் படர்ந்துள்ளன. இதனால் நீர் செல்ல முடியாமல் வெள்ளப்பெருக்கெடுத்து, அடையாளம்பட்டு, வானகரம் ஆகிய ஊராட்சிகளில் மழைநீர் புகுவதற்கான வாய்ப்பிருந்தது. இதனை உடனடியாக அகற்ற வில்லிவாக்கம் ஒன்றியத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற காவல் இணை ஆணையர் சுதாகர், பணிமேற்கொள்ளும் போது தானே முன்னின்று பணிகளை நேரில் பார்வையிட்டார். 
    துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரா.சத்தியமூர்த்தி, ரேணுகா, ஊராட்சி செயலாளர் கருணாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai