சுடச்சுட

  
  clean

  மாமல்லபுரம் கலங்கரை விளக்கம் பகுதியில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் நடைபெற்ற கால்வாய் தோண்டும் பணி.

  மாமல்லபுரம் கலங்கரைவிளக்கம் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கான நடவடிக்கையை பேரூராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை தொடங்கியது. 
  மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் சாலையில் மழைநீர் தேங்குவதால் பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் அவதிக்குள்ளாகின்றனர். 
  இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரில் சிரமத்துடன் சென்று வந்தனர். இப்பிரச்சனையைத் தீர்க்க மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். 
  இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த 30-ஆம் செய்தி வெளியானது . இதையடுத்து, சாலையில் தேங்கும் மழைநீர் வெளியேறும் வகையில், கால்வாய் அமைக்கும் பணியை மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் வியாழக்கிழமை தொடங்கியது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai