விவசாயியிடம் நூதனத் திருட்டு
By DIN | Published on : 03rd November 2017 03:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இரு சக்கர வாகனத்தில் ன் கீழே பத்து ரூபாய் நோட்டு கிடக்கிறது என்று சொல்லி ஐந்தரை பவுன் நகையைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கனகம்மாசத்திரத்தை அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). விவசாயியான இவர், வியாழக்கிழமை கனகம்மாசத்திரம் பகுதியில் செயல்படும் வங்கியில் அடகு வைத்திருந்த, ஐந்தரை பவுன் நகையை மீட்டுக் கொண்டு, தனது இரு சக்கர வாகனத்தில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், கீழே பத்து ரூபாய் நோட்டு விழுந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அதனை எடுத்துக்கொண்டு ராஜேந்திரன் திரும்பியபோது, பெட்டியில் வைத்திருந்த ஐந்தரை பவுன் நகையை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து கனகம்மாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.