சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் 21,903 பேருக்கு மடிக்கணினிகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள், புத்தகப் பை உள்ளிட்ட பல்வேறு நலத்தி ட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
  திருவள்ளூர் மாவட்டத்தில் 111 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகள் 21,903 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, எல்காட் நிறுவனம் மூலம் கடந்த 2 நாள்களாக ஒவ்வொரு பள்ளிக்கும் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில், முதல்கட்டமாக 51 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11,546 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நாள்களில் மீதமுள்ள பள்ளிகளுக்கு 10,357 மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. 
  இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட நாளில் விழா நடத்தப்பட்டு, ஆட்சியர் , கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai