Enable Javscript for better performance
அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் அரிசி கடை உள்ளிட்ட 3 கடைகளில் வெள்ளிக்கிழமை திருட்டுச் சம்பவங்கள் நடந்தன.
    ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் நூர்முகமது (60). இவர் 5 ஆண்டுகளாக அரிசி கடை நடத்தி வருகிறார். வியாழக்கிழமை வழக்கம்போல வியாபாரம் முடிந்தபின் கடையைப் பூட்டிவிட்டு அதே பகுதியில்உள்ள அவரது வீட்டிற்குச் சென்று விட்டார். வெள்ளிக்கிழமை காலை அவர் கடைக்கு வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஆரம்பாக்கம் போலீஸார் கடையை சோதனையிட்டனர். அப்போது கல்லா பெட்டியில் இருந்த 30 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதே போன்று, அதே பகுதியைச் சேர்ந்த பாரத் கேஸ் விநியோகக் கிடங்கில் புகுந்த மர்ம நபர்கள் அந்த கடையின் சிசிடிவி கேமிராக்கள் மூன்றை உடைத்து கடையில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். 
    மேலும், அப்பகுதியில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையின் கதவை உடைத்த மர்ம நபர்கள் அங்கு ரொக்கம் ஏதும் இல்லாத நிலையில் விட்டுச் சென்றுள்ளதும் தெரியவந்தது. இந்த திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai