சுடச்சுட

  
  lorry

  பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் லாரிகள்.

  ஆந்திராவிலிருந்து அதிக பாரம் கிரானைட் கற்களை ஏற்றி வந்த 4 லாரிகளின் ஓட்டுநர்கள் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு ரூ. 1.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 
  ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகள் வழியாக தமிழகத்திற்கு லாரிகளில் அதிக பாரத்துடன் கிரானைட் கற்கள் ஏற்றிச் செல்வதாக வந்த புகாரின் பேரில் திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவின்படி திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் வியாழக்கிழமை இரவு பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மாநில நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார்.
  அப்போது ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு அதிக பாரம் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த 4 லாரிகள் சிக்கின. அதிக பாரம் ஏற்றி வந்த குற்றத்திற்காக ரூ.1.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் லாரிகளின் ஓட்டுநர்கள் உரிமம் தாற்காலிகமாக ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. 
  இது தொடர்பாக ஆய்வாளர் கூறுகையில், ''திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பகுதிகளில் அதிக பாரத்துடன் வாகனங்கள் இயக்குவது, லாரி, டிராக்டர், ஆட்டோக்களில் போக்குவரத்து விதிகளை மீறி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வது போன்ற குற்ற சம்பவங்கள் தடுக்கப்பட்டு வருகின்றன. 
  மேலும் இதில் சம்பந்தப்பட்ட வாகனங்கள், ஓட்டுநர் உரிமங்கள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai