Enable Javscript for better performance
கன மழை: சோழவரத்தில் அதிகபட்சமாக 86 மி.மீ. பதிவு- Dinamani

சுடச்சுட

    
    solavaram

    திருவள்ளூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்ததால் சோழவரம் அதிகபட்சமாக 86 மி.மீ. மழை பதிவானது.
    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம், செங்குன்றம், பொன்னேரி, அம்பத்தூர், தாமரைப்பாக்கம் செம்பரப்பாக்கம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கனமழை பெய்தது. இதனால், சாலைகள், தெருக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். 
    பூங்கா நகர், பெரியகுப்பம், அரசு ஊழியர் குடியிருப்பு, எம்.ஜி.ஆர். நகர், ஆவடி பகுதியில் திருநின்றவூர், காக்காளூர், கடம்பத்தூர் கன்னிமா நகர், பட்டாபிராம், நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 
    கன்னிமா நகரில் 80-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று அப்பகுதி மக்களை வெளியேற்றி, வெண்மனம் புதூர் முகாமில் தங்க வைத்தனர். 
    மழையால் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியகுப்பம் சேரும் சகதியமாக மாறியது.
    மழை அளவு: திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்):
    சோழவரம்-89, செங்குன்றம்-80, பொன்னேரி-77, அம்பத்தூர்-72, தாமரைபாக்கம்-71, செம்பரப்பாக்கம்-69.20, கும்மிடிப்பூண்டி-61, திருவேலங்காடு-46, திருவள்ளூர்-41, ஊத்துக்கோட்டை-39, பூண்டி-30, பூந்தமல்லி-23, திருத்தணி-16, பள்ளிப்பட்டு-5, ஆர்.கே.பேட்டை-2.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai