சுடச்சுட

  
  strike

  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார்.

  திருவள்ளூர் அருகே சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
  திருவள்ளூர் அருகே தலக்காஞ்சேரி, ஹைவேலி அகரம் ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இக்கிராமங்களுக்குச் செல்லும் சாலையில் மயானம் உள்ளது. 
  இதன் அருகே உள்ள குப்பை கிடங்கில் மருத்துவக் கழிவு, தொழிற்சாலை, காய்கறிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும், சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. 
  இதனால், அவ்வழியாகச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குப்பைகள் கொட்ட வந்த லாரிகள் மற்றும் அதிகாரிகளையும் அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்தனர். தொடர்ந்து திருவள்ளூர்-செங்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 
  தகவலறிந்த திருவள்ளூர் நகர் போலீஸார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி நிர்வாகத்திடம் கூறி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai