சுடச்சுட

    
    poneri

    பொன்னேரியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 
    வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த 5 நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 
    இதன் காரணமாக பொன்னேரி பகுதியில் ஓடும் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின. 
    மேலும், பொன்னேரியில் தாழ்வான பகுதிகளான தடப்பெரும்பாக்கம், பாலாஜி நகர், சங்கர் மாருதி நகர் உள்ளிட்ட இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 
    இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நந்தியம்பாக்கம் - கொங்கியம்மன் நகர், அத்திப்பட்டு - புதுநகர் பள்ளம் உள்ளிட்ட இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai