சுடச்சுட

  
  mamalapuram

  மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

  மாமல்லபுரத்தில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதுடன், அரை கிலோ மீட்டர் தூரம் வரை கடல்நீர் கரையைத் தாண்டி வந்தது. 
  வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாமல்லபுரம் பகுதியில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இங்குள்ள கடற்கரை கோயில் பகுதியைக் கடல் நீர் சூழ்ந்ததால் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் சுமார் அரை கி.மீ. தூரத்துக்கு கடல்நீர் கரையை நோக்கி சீறிப் பாய்ந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் யாரும் கடற்கரை பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடற்கரை பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் 3-ஆவது நாளாக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai