சுடச்சுட

  
  demand

  திருவள்ளூரில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  திருவள்ளூர் ரயில் நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிர்வாகி நிலவன் தலைமை வகித்தார். 
  கருத்தியல் பரப்பு மாநில இணைச் செயலாளர் தி.ராசகுமார், மாவட்டச் செயலாளர்கள் மு.வ.சித்தார்த்தன், ஒரகடம் குமணன், மாநில நிர்வாகிகள் தளபதி சுந்தர் மற்றும் நகர திமுக செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், கம்யூனிஸ்ட் சார்பில் கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  இதில், போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருக்கும் போதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். தமிழிசை செளந்திரராஜனை வன் கொடுமை சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai