சுடச்சுட

  
  penjamin

  புழல் ஒன்றியம் பாலவாயல் பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அமைச்சர் பா.பெஞ்சமின். உடன், மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி 

  செங்குன்றத்தில் மழைநீர் புகுந்த குடியிருப்பு பகுதிகளைதமிழக ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார். 
  செங்குன்றம் பகுதியில் உள்ள குமனூர் சாலையில் உள்ள பாலவாயல், நியூ சன் சிட்டி நகர், குமரன் நகர் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாயினர். தகவலறிந்த அமைச்சர் பெஞ்சமின், ஆட்சியர் எ.சுந்தரவல்லி ஆகியோர் வெள்ளம் பாதித்தப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
  இதையடுத்து வெள்ளம் வடிய உரிய நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். 
  இதையடுத்து மாதவரம் வட்டாட்சியர் ரமேஷ், அம்பத்தூர் கோட்டாட்சியர் அரவிந்தன், செங்குன்றம் காவல் ஆய்வாளர் சுரேந்திரன், தீயணைப்புத் துறை அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் அப்பகுதி மக்களை படகுகள் மற்றும் டிராக்டர்களில் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் அப்பகுதியில் உள்ள தீர்த்தங்கரையாம்பட்டு சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். 
  மேலும், குமரன் நகரில் 82-வயது மூதாட்டி மட்டும் குடியிருப்பின் மேல் பகுதியில் இருந்து கொள்வதாக கூறினார். இதையடுத்து அவருக்கு தேவையான உணவுப் பொருள்கள் மற்றும் ஜமுக்காளம் ஆகியவைகளை அதிகாரிகள் வழங்கினர்.
  பின்னர் சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களிடம் அமைச்சர் மற்றும் ஆட்சியர் ஆகியோர் குறைகளை கேட்டறிந்தனர். 
  உடனே தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai