சுடச்சுட

  

  கடந்த 5 நாள்களாக பெய்த மழையால் புறநகர் பகுதியில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கிறது. 
  சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் சார்பில் பல்வேறு மீட்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை கொரட்டூர் அக்ராவரம் பாலாஜி நகர், சீனிவாச நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் மழைநீர் ஊற்று எடுத்தது. இதனால் வீட்டில் தங்க முடியாத நிலை ஏற்பட்டது. 
  இவர்களின் நிலையறிந்து அம்பத்தூர் மண்டல அதிகாரி பாலசுப்ரமணியம், 6 பெண்கள்உள்பட 18 பேரை அழைத்துவந்து, அக்ராவரம் அரசு பள்ளியில் தங்கவைத்தனர். அவர்களுக்கு அம்மா உணவகத்திலிருந்து மூன்று வேளை உணவையும் ஏற்பாடு செய்தனர். மேலும் அவர்களுக்கு படுக்கை விரிப்புகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனரா என்று ஊழியர்களை அனுப்பி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai