ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வெள்ளம்
By DIN | Published on : 05th November 2017 02:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பை ஒட்டியுள்ள சாலை.
சென்னை புறநகர் பகுதியான ஆவடி வீட்டுவசதிவாரியக்குடியிருப்பில் கடந்த 4 நாள்களாக பெய்துவரும் கன மழையால் சாலை முழுவதும் ஆறாக ஓடுகிறது.
ஆவடி வீட்டுவசதிவாரியக்குடியிருப்பு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசு உற்பத்தியாவதுடன், தொற்றுநோய்பரவி வருகிறது என்றும், நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ஆவடி நகராட்சியில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், நடவடிக்கை ஆமைவேகத்தில் நடைபெறுகிறது என்று கூறி பல்வேறு போராட்டங்களிலும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மழைநீர் தேங்கியிருப்பதால் இங்குள்ள பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.