சுடச்சுட

    
    visalakshi

    கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேட்டில் தேசிய ஊழல் தடுப்பு வாரத்தை ஒட்டி பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    அக்டோபர்-30 ஆம் தேதி முதல் நவம்பர்-4ஆம் தேதி வரை மத்திய அரசு நிறுவனங்களில் 'தேசிய ஊழல் தடுப்பு வாரம்' கொண்டாப்படுகிறது. இதனை ஒட்டி பூவலம்பேடு பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கிளை மேலாளர் விசாலாட்சி தலைமை தாங்கினார். உதவி மேலாளர் சுரேஷ் வரவேற்றார். விவசாய அலுவலர் ராகுல் ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார். 'ஊழல் இல்லா இந்தியா' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். வங்கி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வர்த்தக தாளாளர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் திரளாக பங்கேற்று ஊழல் தடுப்பு உறுதிமொழி ஏற்றனர். முடிவில் வங்கி உதவி மேலாளர் சந்தீப் நன்றி கூறினார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai