சுடச்சுட

  

  சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளை கோசாலையில் ஒப்படைத்த போலீஸார்

  By DIN  |   Published on : 05th November 2017 02:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cow

  போக்குவரத்துக்கு இடையூறாகத் திரிந்த கால்நடைகளைப் பிடித்த எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி உடன் போலீஸார்.

  திருவள்ளூரில் போக்குவரத்துக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரிந்த 18 மாடுகளை காவல் துறையினர் பிடித்து கோசாலையில் ஒப்படைத்தனர். 
  திருவள்ளூர் நகராட்சி பகுதியில் வாகனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூராக சாலைகள் மாடுகள் சுற்றித் திரிகின்றன. திருவள்ளூர்-திருத்தணி சாலை, திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை-செங்குன்றம் சாலை, ஆவடி, பூந்தமல்லி ஆகிய சாலையில் மாடுகளை சிலர் அவிழ்த்து விடுகின்றனர். இந்த மாடுகள் சாலையோரங்களில் உள்ள சாலை தடுப்புகளில் புற்களை மேய்ந்து, அங்கேயே படுத்துவிடுகின்றன. இதனால் வாகனங்கள் துரிதமாக செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் மாடுகள் மீது சரக்கு வாகனங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்படுவதால் மாடுகள் உயிரிக்கின்றன. 
  இதைத் தவிர்க்கும் நோக்கத்தில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பியிடம் புகார் அளிக்கப்பட்டது. 
  அதன் அடிப்படையில் எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி தலைமையில் போலீஸார் நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மாடுகளை சனிக்கிழமை பிடித்தனர். திருவள்ளூர்-திருப்பதி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை, ஆவடி பிரிவு சாலை, காமராஜர் சிலை, ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 18 மாடுகளைப் பிடித்தனர். இதையடுத்து அந்த மாடுகள் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு திருவேலங்காடு பகுதியில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர்.
  இதுகுறித்து எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி கூறியதாவது: திருவள்ளூர் கிராமிய காவல் நிலையத்தில் மாடுகளின் உரிமையாளர்கள் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியப் பிறகு கோசாலையில் இருந்து மாடுகளை பெற்றுக் கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு இடையூராக சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai