சுடச்சுட

  

  டெங்கு கொசு உற்பத்தி: 2,160 பேருக்கு ரூ. 9.56 லட்சம் அபராதம்

  By DIN  |   Published on : 05th November 2017 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sundaravali

  டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி. 

  திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரக் கேடாக வைத்திருந்ததாக 2,160 பேருக்கு ரூ. 9.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.
  பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பட்டரைபெரும்புதூர், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியம், அருங்குளம் கிராமத்தில் நடைபெற்ற காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் தடுப்புப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்களை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
  இதில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, நோயாளிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கினார். பின்னர் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை கண்டறியும் செல் கவுண்டர் கருவியைக் கொண்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்வதைப் பார்வையிட்டார்.
  இதையடுத்து செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறியதாவது: 
  மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் இரண்டு முறைக்கு மேல் தங்களது பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாராச் சீர்கேடாக வைத்துள்ளதாக 2,160 பேருக்கு ரூ. 9.56 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டுள்ளது.
  மேலும், கடந்த 3 மாதங்களில் மட்டும் போலி மருத்துவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
  ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர்கள் கெ.ரா.திவ்யஸ்ரீ (திருவள்ளுர்), ஜெயராமன் (திருத்தணி), வட்டாட்சியர்கள் தமிழ்ச்செல்வன் (திருவள்ளுர்), நரசிம்மன் (திருத்தணி) ஆகியோர் உடனிருந்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai