சுடச்சுட

  
  dmk

  கும்மிடிப்பூண்டி அருகே கவரப்பேட்டையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது . 
  கவரப்பேட்டையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் உயர் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பாக மத்திய பா. ஜ. க அரசை கண்டித்து நவம்பர் 8 -ஆம் தேதி அன்று பொன்னேரி அண்ணா சிலை அருகில் நடைபெறவுள்ள மாபெரும் ஆர்பாட்டத்திற்கு திமுகவினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும், வட கிழக்கு பருவ மழையில் பொதுமக்களின் சிரமங்களை அதிமுக அரசு கண்டு கொள்ளாத சூழலில் திமுக தொண்டர்கள் அவரவர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் மு.பகலவன் தலைமை தாங்கினார். 
  தலைமை செயற்குழு உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜன் வரவேற்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ. கிருஷ்ணசாமி, மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஒன்றியச் செயலாளர்கள் மு. மணிபாலன், பூண்டி டி.கே.சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் பா.செ.குணசேகர், மாவட்ட துணைச் செயலாளர்கள் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், சந்திரன், கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிபூண்டி கி.வேணு, கட்சி வளர்ச்சி குறித்தும் கட்சி சார்பாக நடத்தப்படும் போராட்டங்கள் குறித்தும் பேசினார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai