Enable Javscript for better performance
திருவள்ளூரில் தாழ்வான பகுதியில் சூழ்ந்த மழைநீர்- Dinamani

சுடச்சுட

    
    tiruvallur

    மணவாளநகரில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றும் பெண்மணி.

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் தொடர்மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினர்.
    திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை காலை வரை மழை பெய்தது. அதைத்தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. இதனால் பொன்னேரி, மாதவரம், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினர். இந்நிலையில், சனிக்கிழமை மாலையில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது. மழை காரணமாக திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மணவாளநகரில் வெள்ளநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர். பின்னர், மழை நின்றதும் குடியிருப்புகளில் இருந்த நீர் இரைத்து வெளியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் மழை பெய்தால் மழைநீர் புகும் நிலை உள்ளது. 
    இதுகுறித்து மணவாளநகரைச் சேர்ந்த அன்னலட்சுமி கூறுகையில், இப்பகுதி தாழ்வாக உள்ளதாலும், கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாத காரணத்தாலும் மழைபெய்யும் போதெல்லாம் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. அத்துடன் விஷ ஜந்துகளும் புகுந்து விடுவதால் வீட்டுக்குள் அச்சத்துடந் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது . 
    இப்பகுதியை அவ்வப்போது அதிகாரிகள் வந்து பார்த்துச் செல்கின்றனர். ஆனால், இதுவரை கழிவுநீர் வாய்க்கால் அமைத்துக் கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். 

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai