சுடச்சுட

  

  நந்தியாற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளியதாக பொக்லைன், லாரி, 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 20 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.
  திருத்தணியை அடுத்த தெக்களூர் பகுதியில் செல்லும் நந்தி ஆற்றில் அரசு அனுமதியின்றி சிலர் மணல் அள்ளுவதாக வருவாய்த் துறையினருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன் மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் சனிக்கிழமை மாலை தெக்களூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
  அப்போது, அகூர்- தெக்களூர் இடையே நந்தியாற்றின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் அருகே மணல் அள்ளிக் கொண்டிருந்த ஒரு பொக்லைன் இயந்திரம், ஒரு லாரி மற்றும் இரண்டு டிராக்டர்கள் என மொத்தம் நான்கு வாகனங்களை வட்டாட்சியர் பறிமுதல் செய்தார். மேலும், 20 யூனிட் மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai