Enable Javscript for better performance
பாதிக்கப்பட்டோருக்கு தமிழிசை சௌந்தரராஜன் உதவி- Dinamani

சுடச்சுட

    
    help

    மாதவரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உணவு பொட்டலங்களை வழங்கினார். 
    சென்னை மாதவரம் அடுத்த புழல் பகுதியில் உள்ள திருமால் நகர், புத்தகரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாள்களாக மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பாஜக சார்பில் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று புழல், ரெட்டேரி, புத்தகரம், திருமால் நகர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களை அவர் வழங்கினார். அப்போது அவர், இந்த நிலைக்குக் காரணமான அதிகாரிகளின் அலட்சியப் போக்குக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அரசுக்கும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அரசு விரைந்து நிவாரணப் பணி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். 
    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.ரவிராஜ், மாவட்ட தலைவர் எம்.பாஸ்கர், துணைத் தலைவர் சசிதரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai