Enable Javscript for better performance
பொன்னேரியில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்- Dinamani

சுடச்சுட

    
    poneri

    கோயில் குளம் நிரம்பி குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம்.

    பொன்னேரியில் கடந்த 6 நாள்களாக பெய்து வரும் கன மழையால் அங்குள்ள அகத்தீஸ்வரர் கோயில் குளம் நிரம்பி, வெள்ளம் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. 
    வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த 6 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொன்னேரி பகுதியில் உள்ள பாலாஜி நகர், மூகாம்பிகை நகர், சங்கர் மாருதி நகர் உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. 
    இந்நிலையில் பொன்னேரியில் வெள்ளிக்கிழமை இரவு இடை விடாது கனமழை பெய்ததால், அகத்தீஸ்வரர் கோயில் குளம் நிரம்பியது. தொடர்ந்து மழைநீர் செல்ல வழியில்லாமல் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது. 
    இதனால், வள்ளலார் தெரு, சிவன் கோயில் குளக்கரையை சுற்றிலும் வசிக்கும் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள நீரினை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை 
    விடுத்துள்ளனர். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai