சுடச்சுட

  
  poneri1

  பொன்னேரி பகுதியில் கடந்த 6 நாள்களாக பெய்து வரும் கன மழையால் 5ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. 
  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஒன்றியத்தில் சுமார் 20ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 6 நாள்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. 
  தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் அப்பகுதியில் உள்ள பாசன ஏரிகள் நிரம்பி வருகின்றன. அத்துடன் ஆரணி ஆற்றில் கட்டப்பட்டுள்ள லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி உபரி நீர் வெளியேறிச் செல்கிறது. அத்துடன் இப்பகுதியில் இடை விடாது பெய்து வரும் கன மழையால் பெரியகரும்பூர், தேவம்பட்டு, கங்காணிமேடு, ஆசானபுதூர். பெரும்பேடு, அச்சரப்பள்ளம், வஞ்சிவாக்கம், திருப்பாலைவனம், மெதூர் உள்ளிட்ட கிராமங்களில், 5ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், பயிர்களை மூழ்கடித்துள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர். இன்னும் 3 நாள்களுக்கு தொடர்ந்து மழை பெய்தால், மூழ்கியுள்ள பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
  ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மழை நீரில் மூழ்கி இருப்பது அப்பகுதி விவசாயிகளை வேதனையுறச் செய்துள்ளது.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai