சுடச்சுட

  
  police

  கும்மிடிப்பூண்டி என்.எம்.எஸ் நகரில் ரூ.10லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பான் - குட்கா பொருள்களை ஆந்திர மாநிலம் தடா போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
  கும்மிடிப்பூண்டி என்.எஸ்.எம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (42). இவர் வெள்ளிக்கிழமை பாஸ்கர்(40) என்பவரின் காரில் 12 மூட்டையில் பான் - குட்கா போதைப் பொருள்களை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் தடா பகுதியில் விற்பதற்காக சென்றுகொண்டிருந்தார். அப்போது தடா-காளஹஸ்தி சாலையில் தடா போலீஸார் அந்த காரை மடக்கி சோதனையிட்ட போது, அதில் தடை செய்யப்பட்ட பான் மற்றும் குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தடா போலீஸார் மோகன் மற்றும் பாஸ்கரை கைது செய்து தடா காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியபோது, மோகன் அவர் வசித்து வரும் கும்மிடிப்பூண்டி என்.எஸ்.எம் நகர் பகுதியில், இரண்டு குடோன்களை வாடகைக்கு எடுத்து போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. தடா காவல் ஆய்வாளர் கிஷோர்பாபு, உதவி ஆய்வாளர் வெங்கடேஸ்வரராவ் உள்ளிட்ட ஆந்திர மாநில போலீஸார் கும்மிடிப்பூண்டிக்கு வந்து மோகனின் வீட்டிலும், குடோன்களிலும் சுமார் 30 மூட்டைகளில் இருந்த பான் மற்றும் குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனர். 
  ஆந்திர போலீஸார் கும்மிடிப்பூண்டிக்கு வந்து ரூ. 10 லட்சம் மதிப்புள்ள பான் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. ராஜன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீஸார் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பான், குட்கா போன்றவை விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் சுமார் 10 கிலோ எடையுள்ள பான், குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai