சுடச்சுட

  
  marcket

  திருவள்ளூர் பகுதியில் தொடர் மழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலை இருமடங்கு அதிகரித்துள்ளது. இதில் சிறிய வெங்காயம் கிலோ ரூ. 140-க்கு விற்பனை செய்யப்பட்டது.
  ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து திருவள்ளூர் பகுதி வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தமிழகத்திலும் தொடர் மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால், கடந்த 20 நாள்களாக காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளன. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  திருவள்ளூர் காய்கறிச் சந்தையின் சனிக்கிழமை விலை நிலவரம் (கிலோவில்): 
  ரூ. 25-க்கு விற்கப்பட்ட தக்காளி-ரூ. 48 முதல் ரூ. 50-க்கும், ரூ. 20-க்கு விற்கப்பட்ட பெரிய வெங்காயம்-ரூ. 48-க்கும், ரூ. 70-க்கு விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம்-ரூ. 140 முதல் ரூ. 160-க்கும். ரூ. 45-க்கு விற்கப்பட்ட மிளகாய்-ரூ. 100-க்கும், ரூ. 20-க்கு விற்கப்பட்ட பீன்ஸ்-ரூ. 60-க்கும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட கேரட்-ரூ. 55-க்கும், ரூ. 20-க்கு விற்கப்பட்ட காலிஃபிளவர்-ரூ. 40-க்கும், ரூ. 20-க்கு விற்கப்பட்ட முட்டைகோஸ்-ரூ. 40-க்கும், ரூ. 30-க்கு விற்கப்பட்ட பாகற்காய்-ரூ. 65, ரூ. 25-க்கு விற்கப்பட்ட கருணைக்கிழங்கு-ரூ. 45-க்கும், ரூ. 15-க்கு விற்கப்பட்ட உருளைக் கிழங்கு-ரூ. 25-க்கும், ரூ. 20-க்கு விற்கப்பட்ட பீட்ரூட்-ரூ. 45-க்கும், அவரை-ரூ. 60, செளசெள-ரூ. 40-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதுகுறித்து திருவள்ளூர் காய்கறி வியாபாரி ராமுலு கூறியதாவது: 
  தற்போதைய நிலையில் தமிழகம் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் மற்றும் சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளன. 15 லாரி லோடுகள் வரையில் காய்கறிகள் விற்பனைக்கு வந்த நிலையில், கடந்த இரு வாரமாக பாதியாகக் குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் தான் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வு ஒரு மாதம் வரை நீடிக்கும். வரத்து தொடங்கியதும் விலையும் குறையும் என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai