Enable Javscript for better performance
வீடு புகுந்து பணம், நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். மெடிக்கல் ஷாப் உரிமையாளர். வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்கள் இவரின் வீட்டில் புகுந்து, பணம், தங்க நகை, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்மிடிப்பூண்டி மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32). இவர் மாதர்பாக்கம் பஜாரில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை கடையைப் பூட்டி விட்டு கார்த்திக் அவரது மனைவி வைத்தீஸ்வரி மற்றும் குடும்பத்தாருடன் திருப்பதிக்கு சாமி கும்பிட சென்றனர். இந்நிலையில், மர்ம நபர்கள் நள்ளிரவு கார்த்திக் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டிற்குள் சென்று பீரோவை உடைத்து அதில் இருந்த 15 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.15ஆயிரம் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்றனர். 
    சனிக்கிழமை காலை அக்கம் பக்கத்தார் கார்த்திக்கின் வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இது குறித்து பாதிரிவேடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தொடர்ந்து இது குறித்து திருப்பதியில் இருந்த கார்த்திக்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீடு திரும்பிய கார்த்திக் தனது வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பாதிரிவேடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம், உதவி ஆய்வாளர் சதாசிவம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai