சுடச்சுட

  

  தினமணி செய்தி எதிரொலி: குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் வெளியேற்றம்

  By DIN  |   Published on : 06th November 2017 03:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  visit

  திருவள்ளூர் பகுதியில் மழை நீர் சூழ்ந்த குடியிருப்புகளில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பொக்லைன் இயந்திரம் உதவியுடன் ஞாயிற்றுக்கிழமை கழிவு நீர் வாய்க்காலில் அடைப்புகளை சரிசெய்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். 
  திருவள்ளூர் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் வெங்கத்தூர் ஊராட்சியில் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மணவாளநகரில் உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதுகுறித்து 'தினமணி' யில் ஞாயிற்றுக்கிழமை (5.11.2017) செய்தி வெளியானது. 
  அதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். அப்போது, கழிவு நீர் கால்வாயில் இருந்த அடைப்புகளை சரி செய்து, குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரையும் வெளியேற்றினர். இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
  பொன்னேரியில்...
  பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே குடியிருப்புகளை சூழ்ந்திருந்த வெள்ள நீரை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். 
  கடந்த 6 நாள்களாக பொன்னேரி பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயில் திருக்குளம் நிரம்பியது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு இடைவிடாது பெய்த மழை காரணமாக குளத்தின் நீர் வெளியேறி செல்ல வழியில்லாமல் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்ததன் காரணமாக, அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
  இதுகுறித்து தினமணி நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து, பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர், பேரூராட்சி ஊழியர்களுடன் அங்கு விரைந்து சென்று, குடியிருப்புகளை சூழ்ந்திருந்த வெள்ள நீரை மின் மோட்டார் மூலம் அகற்றும் பணியை தொடங்கி வைத்தார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெள்ள நீரை அகற்றும் பணி நடைபெற்றது. மேலும் அப்பகுதியில் உள்ள வெள்ள நீரை அகற்றும் பணி திங்கள்கிழமையும் தொடரவுள்ளது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai