சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் பயிர்ச் சேத விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. 
  திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதில் பொன்னேரி, எல்லாபுரம் மற்றும் மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளை நிலங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பயிர்கள் மூழ்கியுள்ளன. இந்நிலையில் பயிர்ச்சேதம் குறித்து கணக்கெடுத்து அதுகுறித்த முழு விவரங்களை அரசுக்குத் தெரிவிக்குமாறு வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது. 
  அதில், கிராம நிர்வாக அலுவலர்கள் பயிர்ச் சேதம் குறித்து, ஒரே இடத்தில் அமர்ந்தும், வாய்மொழியாக ஒருவரிடம் கேட்டறிந்தும் பயிர்ச்சேதம் குறித்து கணக்கெடுப்பு நடத்தக் கூடாது. 
  பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு உண்மையான தகவல்களையே தெரிவிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அந்தந்த பகுதி வருவாய் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்ட பின்னரே, பயிர்ச் சேதம் குறித்த கணக்கெடுப்பை மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai