சுடச்சுட

  

  மதகு திறப்பு: மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

  By DIN  |   Published on : 06th November 2017 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tiruvallur1

  திருவள்ளூர் அருகே ஏரியிலிருந்து செல்லும் கால்வாயை ஆக்கிரமித்தும், ஏரியில் மழை நீர் தேங்காதவாறு மதகுகளை திறந்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
  திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது மேல்நல்லாத்தூர் கிராமம். இந்த கிராமத்தை அடுத்து 120 ஏக்கர் பரப்பளவில் மேல்நல்லாத்தூர் பட்டரை ஏரி உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி மூலம் அப்பகுதியில் 300 ஹெக்டேரில் உள்ள விளைநிலத்தில் சாகுபடியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மேல்நல்லாத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் தொழிற்சாலையை விரிவுப்படுத்தும் நோக்கில், ஏரியிலிருந்து செல்லும் கால்வாயையும் சேர்த்து ஆக்கிரமிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.
  இதற்கு முன்பு வரையில் அப்பகுதியில் விவசாய சாகுபடிக்காக ஏரியில் நீர் நிரம்பியதும் பொதுப் பணித்துறையினரால் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த நீர், கீழ் நல்லாத்தூர், வெங்கத்தூர் ஏரிக்குத் திருப்பி விடப்படும். தற்போதைய நிலையில் இந்த ஏரியிலிருந்து செல்லும் 3 மதகுகளில், ஒரு மதகை பொதுப்பணித்துறையினரின் அனுமதியின்றி சில மர்ம நபர்கள் திறந்து விடுவதாகவும், இதனால், ஏரியில் தேங்கும் நீர் சிறிது, சிறிதாக வெளியேறுவதாகவும், ஏரியில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
  ஆனால், கன மழை தொடர்ந்து பெய்வதால், இந்த ஏரி நிரம்பினால் கால்வாயில் செல்லும் நீர் அனைத்தும் தனியார் தொழிற்சாலைக்குள்புகுந்து விடும் சூழல் நிலவுவதாகவும், இதன் காரணமாகவே , ஆலை நிர்வாகம் தன்னிச்சையாக மதகுகளை திறந்து தண்ணீரை வெளியேற்றுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
  எனவே, இந்த ஏரியில் உள்ள தனியார் தொழிற்சாலையின் ஆக்கிரமிப்புகளை மீட்டு, மேல்நல்லாத்தூர் மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் ஏரி நீரால் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai