சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவில் தொடங்கி, தொடர்ந்து விட்டு, விட்டு பெய்த மழையால் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 
  திருவள்ளூர் பகுதியில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை, ஞாயிற்றுக்கிழமையும் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அதேபோல், இந்த மாவட்டத்தில் உள்ள பூண்டி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், தாமரைப் பாக்கம், திருவாலங்காடு, செங்குன்றம் , சோழவரம் பகுதிகளில் மிதமாகவும், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு , பொன்னேரி ஆகிய பகுதிகளில் பரவலாக பலத்த மழையும் பெய்தது. 
  பொன்னேரி, மீஞ்சூர், எல்லாபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த வெள்ளம் வடியாமல் இன்னும் 2 நாள்கள் நீடித்தால் பயிர்கள் அழுகிவிடும் அபாயம் உள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். 
  இந்த கன மழையால் பல ஏரிகள், குளங்களும் நிரம்பி வருகிறது. ஆனால், பெரும்பாலான இடங்களில் ஏரிகளுக்குச் செல்லும் நீர்வரத்துக் கால்வாய்களை குடியிருப்புகளும், தொழிற்சாலைகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால், தொடர்மழை பெய்த நிலையிலும் பெரும்பாலான ஏரிகள் இன்னும் நிரம்பாத நிலையில் இருப்பதாகவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
  மழையளவு: மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): பூண்டி-52, ஊத்துக்கோட்டை-47, திருவள்ளூர்-46, தாமரைப்பாக்கம்-43, திருவாலங்காடு-42, செங்குன்றம்-34.20, சோழவரம்-30, ஆர்.கே.பேட்டை, திருத்தணி தலா-25, பள்ளிப்பட்டு -21, பொன்னேரி-16, செம்பரம்பாக்கம்-14.80, கும்மிடிப்பூண்டி-13, பூந்தமல்லி-11.80, அம்பத்தூர்-4 .
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai