Enable Javscript for better performance
ஆதி திராவிடர் நல மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஆதி திராவிடர் நல மேம்பாட்டு திட்டங்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு

    By DIN  |   Published on : 07th November 2017 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்த காலாண்டுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 
    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நிலம் எடுப்பு, இலவச வீட்டுமனை பட்டா, நிலம் அளந்து அத்து காட்டுதல், மயானபூமிக்கு இடம் தேர்வு செய்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இயங்கும் விடுதிகளில் உள்ள குறைபாடுகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. 
    மேலும், இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட 12 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மு.கலைச்செல்வி, அலுவல் சார்பு உறுப்பினர்கள், அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலத்துறை சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai