சுடச்சுட

  
  farmar1

  பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் பகுதியில் கந்து வட்டி கடன் காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டதாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  திருக்கண்டலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயியான இவர் அப்பகுதியைச் சேர்ந்த லதா, செல்வம், பிரகாஷ் உள்ளிட்டோரிடம் கடன் வாங்கியிருந்தார். கந்து வட்டியோடு அசல் தொகை சேர்த்து கடன் ரூ. 40 லட்சமாக உயர்ந்த நிலையில் கடன் தந்தவர்கள் ரமேஷிடம் பணத்தைத் திரும்பக் கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரமேஷ், விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
  இது குறித்து திங்கள் கிழமை ரமேஷின் தந்தை சுப்பிரமணி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீஸார், இந்த தற்கொலை குறித்தும், கந்து வட்டி புகார் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai