சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மழை பாதிப்பு மறு சீரமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  By DIN  |   Published on : 07th November 2017 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gumudipoondi1

  கும்மிடிப்பூண்டி - அயநெல்லூர் பகுதியில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தும் தமிழக வேளாண்துறை இணைச் செயலாளர் எம்.கருணாகரன்.

  கும்மிடிப்பூண்டியில் வெள்ளப் பாதிப்புகள் குறித்த புகார்களின் பேரில் 24 மணி நேரமும் சேவை அளிக்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்த புகார்களை உடனுக்கு உடன் வருவாய் துறையினருக்கு தெரிவித்து பாதிப்பை சீர் செய்யும் வகையில் பொதுமக்களுக்கு 24 மணி நேர சேவை வழங்கும் வசதியை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தி உள்ளதாக மழை பாதிப்பு கண்காணிப்பு அலுவலரான தமிழக அரசு வேளாண்துறை இணைச் செயலாளர் டாக்டர் எம்.கருணாகரன் தெரிவித்தார்.
  திங்கள் கிழமை அன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால், தனி வட்டாட்சியர் தாமோதரன், வருவாய் ஆய்வாளர்கள் பாலாஜி, கண்ணன், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்ட பொறியாளர் டில்லிபாபு, பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
  இந்நிகழ்வில் மழை பாதிப்பு மறுசீரமைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன் விளக்கினார். இதைத் தொடர்ந்து நெல்லூர் பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள், சாலைகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்தார். கும்புளி கிராமத்தில் வெள்ளப் பாதிப்பால் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்துப் பேசினார். 
  இக்கூட்டத்தில், கும்மிடிப்பூண்டி வட்ட பொதுமக்கள் மழை பாதிப்பு குறித்த குறைகள் மற்றும் புகார்களுக்கு 044-27921491 என்ற தொலைபேசி எண்ணில் வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  மேலும், கும்மிடிப்பூண்டி குறுவட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 8072885020 என்ற எண்ணிலும், பூவலம்பேடு குறுவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் 9042748448 என்ற எண்ணிலும், மாதர்பாக்கம் குறுவட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் 8072447492 என்ற எண்ணிலும், எளாவூர் குறுவட்டத்தை சேர்ந்தவர்கள் 8438988810 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
  இதைத்தொடர்ந்து, மழை தொடர்பான குறைகள், புகார்களை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியருக்கு 9445000491 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும், அவசர மற்றும் முக்கிய புகார்களுக்கு, தமிழக அரசால் மழை பாதிப்பு குறித்து நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழக அரசின் வேளாண்துறை இணை இயக்குநரை 9600067274 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai