சுடச்சுட

  
  river

  காரனோடை அருகே கொசஸ்தலை ஆற்றின் கரை உடைந்து வயல்வெளியில் இருந்த மழை நீர் ஆற்றுக்குள் சென்றது.
  கனமழையால் கொசஸ்தலை ஆற்றின் கரை திங்கள்கிழமை உடைந்தது. இதன் காரணமாக வயல்வெளியில் வெள்ளம் போல் தேங்கி இருந்த மழை நீர் ஆற்றுக்குள் சென்றது. ஆந்திர மாநிலத்தில் தொடங்கும் கொசஸ்தலை ஆறு, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஜெகந்நாதபுரம், காரனோடை, சோத்துபெரும்பேடு, வன்னிப்பாக்கம், வல்லூர் வழியாக வந்து எண்ணூர் முகத்துவாரத்தில் கடலில் கலக்கிறது. இதில் தாமரைப்பாக்கம், வல்லூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு, அங்கு தேக்கி வைக்கப்படும் நீர்ப் பாசனத்துக்கு பயன்படுகிறது. 
  திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தாலும், கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆங்காங்கே மழை நீர் மட்டும் தேங்கிக் கிடக்கிறது. வல்லூர் அணைக்கட்டு பகுதியிலும் நீரின்றி வறண்டு கிடக்கிறது. பூண்டி நீர்த் தேக்கம், அதன் முழு கொள்ளளவை எட்டிய பிறகுதான் கொசஸ்தலை ஆற்றுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டும். தற்போது பூண்டி நீர்த் தேக்கம் அதன் முழு கொள்ளளவை இன்னமும் எட்டவில்லை. 
  இந்நிலையில் காரனோடை பகுதியில் கடந்த 8 நாள்களாக பெய்து வரும் கன மழையால் அங்குள்ள விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி இருந்தது. இதனிடையே காரனோடை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றின் கரை சுமார் 100மீட்டர் தூரத்துக்கு உடைப்பு ஏற்பட்டு வயல்வெளியில் வெள்ளம்போல் தேங்கியிருந்த மழை நீர் ஆற்றுக்குள் சென்றது. 
  தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அ.சுந்தரவல்லி அங்கு சென்று பார்வையிட்டார். மேலும் கரை உடைந்த பகுதிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீரமைக்கும் பணிகளை செய்து 
  வருகின்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai