சுடச்சுட

    
    tractor

    வயல்வெளியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், விவசாயி ஒருவர் திங்கள்கிழமை இறந்தார்.
    திருத்தணியை அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(58). விவசாயி. இவர், திங்கள்கிழமை காலை, நிலத்தை உழுவதற்கு டிராக்டரை ஓட்டிச் சென்றார். நிலத்தை உழுது முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும் வழியில், கால்வாயில் இருந்து டிராக்டர், ஆறு அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், டிராக்டருக்கு அடியில் சிக்கிய ராமகிருஷ்ணன் 
    சம்பவ இடத்திலேயே இறந்தார். இவருக்கு, குமாரி (52), என்ற மனைவியும், வாசு (30) என்ற மகனும் உள்ளனர். இதுகுறித்து திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai