சுடச்சுட

  
  madhavaram

  பவானிநகரில் டெங்கு புழுக்களும், பூச்சிகளும் குறித்து ஆலோசனை வழங்கிய களப்பணியாளர்கள்.

  திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்சியரின் உத்தரவின்பேரில் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் கொசு, விஷப் பூச்சிகள் ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் டெங்கு கொசு , விஷப் பூச்சிகள் ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
  இந்த நிலையில், திங்கட்கிழமை பாடியநல்லூர் ஊராட்சியிலுள்ள பவானிநகர், ஜோதிநகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில், டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஆலோசனைகள் மற்றும் டெங்கு கொசுக்கள், பூச்சிகள் ஒழிப்புப் பணிகளில் சுகாதாரத்துறை களப்பணியாளர்கள் ஈடுபட்டனர். 
  இதுபோன்ற புழுக்கள், பூச்சிகள் இருந்தால்அதனைஅழிக்க வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர். 
  மேலும் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்தை சுத்தமாகவும், தண்ணீர் தேங்காமல் கொசுக்கள், மற்றும் புழு, பூச்சிகள்உருவாகாமல் பாதுகாத்து கொள்ளவும் வேண்டும் என தெரிவித்தனர். இப்பணிகள், திருவள்ளூர் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பிரபாகரன், சோழவரம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயதீபா ஆகியோர் தலைமையில் நடைபெற்றன. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிசங்கரன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர்முகமது அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
  மேலும் இது குறித்து அதிகாரி கூறுகையில், இப்பகுதிகளிலுள்ள மக்களுக்கு டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் தடுப்பு குறித்து ஆலோசனைகளும் மற்றும் கொசுக்கள், புழு, பூச்சிகள் ஒழிப்புப் பணியும் நடைபெற்று வருகிறது. இதில் மக்கள் ஆதரவளித்தால் மட்டுமே தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார். மேலும் சோழவரம் ஒன்றியத்தில் உள்ள நாரணம்பேடு, முனிவேல்நகர், பெரிய காலனி, மகாலட்சுமி நகர், உள்ளிட்ட 7 இடங்களில் மருத்துவ முகாம்களும், பாடியநல்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட பவானிநகர், ஜோதிநகர், நல்லூர், விச்சூர் உள்ளிட்ட 39 பஞ்சாயத்துகளிலும் இப்பணிகள் நடைபெறும் என தெரிவித்தார். 
  இப்பணியின்போது, அப்பல்லோ பயிற்சி செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறையின் களப்பணியாளர்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர். 

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai