சுடச்சுட

  
  gumudipoondi

  புதுகும்மிடிப்பூண்டி வண்ணாண் ஏரியில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ள கரை உடைப்பு

  கும்மிடிப்பூண்டியை அடுத்த புது கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஏரி அதிக கொள்ளளவு காரணமாக அதன் கரைகள் உடைந்து, ஏரி நீர் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்குள்பட்ட 3 பகுதிக்குள் நுழைந்தது. ஏரிக்கரை உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் போராடி வருகின்றனர்.
  கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் வண்ணான் ஏரி உள்ளது. 6 ஏக்கர் பரப்பிலான இந்த ஏரியின் கொள்ளளவு வடகிழக்கு பருவ மழை காரணமாக இந்த ஏரியின் கொள்ளளவு அதிகரித்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் கிழமை பகல் முழுவதும் பலத்த மழை விட்டு விட்டுப் பெய்து வந்த நிலையில், ஏரியின் கொள்ளளவு அதிகரித்து ஏரிக்கரையில் உடைப்பு ஏற்பட்டது. வெள்ள நீர் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சிக்கு உள்பட்ட பாலகிருஷ்ணாபுரம், எல்.வி.நகர் உள்ளிட்ட 3 பகுதிகளுக்குள் புகுந்தது. 
  இதனைத் தொடர்ந்து சம்பவப் பகுதிக்கு கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஆர்.எஸ்.ராஜகோபால், பொதுப்பணித்துறையினர் விரைந்து வந்து, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் சிமெண்ட் மற்றும் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
  மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு தடுக்க கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்புப் படையினரும், பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி இருந்தால் அவர்களை மீட்க தயாராக தேசிய பேரிடர் மீட்பு படையினரும் புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் முகாமிட்டுள்ளனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai