சுடச்சுட

    
    penjamin

    சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 91,92 ஆகிய வார்டுகளில் அமைச்சர் பெஞ்சமின் நேரில் ஆய்வுசெய்தார். கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தேங்கி நின்றதால்,சாலை முழுவதும் மழைநீர் ஆறாக ஓடியது. ஆங்காங்கே சாலைகள் குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    இதைத் தொடர்ந்து அமைச்சர் பெஞ்சமின் நேரில்சென்று ஆய்வுசெய்தார். தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மண்டல அதிகாரி பாலசுப்ரமணியத்திற்கு உத்தரவிட்டார். உடனே பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, ஊழியர்களைக் கொண்டு கால்வாயிலுள்ள அடைப்புகள் அகற்றப்பட்டன. மேலும் துப்புரவுத் தொழிலாளர்கள் மூலம் சுகாதாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai